தமிழக செய்திகள்

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டின் இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நாளை காலை 8.10 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.

தினத்தந்தி

திருவள்ளூர்,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டை வருகிற 1 ஆம் தேதி (நாளை மறுநாள்) காலை 9.10 மணிக்கு இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

இந்த செயற்கைகோள், எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, நிறமாலை போன்ற அறிவியல் ஆய்வுகளையும், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான 'நெபுலா' உள்ளிட்டவற்றையும் ஆராய உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இந்த செயற்கைகோளுடன் மேலும் சில செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துகிறது. இதற்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நாளை காலை 8.10 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், நாளை மறுநாள் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு மீனவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்