செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய உள்துறை செயலாளரும், தற்போதைய மத்திய அமைச்சரவை செயலாளருமான ராஜீவ் கவுபா, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகிய இருவருக்கும் எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலுக்கு சிதம்பரம் தொகுதி எம்.பி.யும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் கடந்த ஆகஸ்டு 13-ந் தேதி கடிதம் எழுதினார்.
இந்நிலையில் இது தொடர்பாக திருமாவளவனுக்கு அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் எழுதியுள்ள பதில் கடிதத்தில், இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருவதால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிப்பது பொருத்தமாக இருக்காது. எனவே, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுக்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.