தமிழக செய்திகள்

ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். சென்னை ஓய்வூதிய இயக்ககத்தின் இணை இயக்குனர் கமலநாதன் முன்னிலை வகித்தார். இதில் ஓய்வூதியதாரர்கள் திரளாக கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து, அதனை நிறைவேற்ற வலியுறுத்தினர். இதையடுத்து கலெக்டர் பேசுகையில், ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை தொடர்பாக 24 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 3 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 21 மனுக்களையும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பி 15 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு