தமிழக செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள், அரசு கட்டாயப்படுத்தவில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் திறக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தமிழக மக்கள் மிக ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று மாலை மேலும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இந்த தடுப்பூசியானது மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள், அரசு கட்டாயப்படுத்தவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழக அரசுக்கு 4.95 லட்சம் தடுப்பூசிகள் இன்று வந்துள்ளன. இதனுடன் ஆயிரம் கோவாக்சின் டோஸ்களும் வந்துள்ளன. இதனால் தமிழகத்தில் தற்போது 6.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசிகள் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள், அரசு கட்டாயப்படுத்தவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு தடுப்பூசி விநியோகம் செய்யப்படும். மத்திய அரசு தொகுப்பிலிருந்து மேலும் 42 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன. கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு