தமிழக செய்திகள்

சாலையில் அடிபட்டு கிடந்த மானை சமைத்து சாப்பிட்ட நபர்கள் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சாலையில் அடிபட்டு கிடந்த மானை எடுத்து சென்று கறி சமைத்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சாலையில் அடிபட்டு கிடந்த மானை எடுத்து சென்று கறி சமைத்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

லிங்கப்பகவுண்டன்வலசு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் ஒன்று சாலையில் கிடந்துள்ளது. உயிருக்கு போராடிய மான் குறித்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காங்கேயம் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், வனத்துறையினர் சென்று பார்த்தபோது, மான் அங்கு இல்லை.

இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, 3 பேர் மானை தூக்கிச் சென்று பண்ணை வீட்டில் கறி சமைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்