தமிழக செய்திகள்

“மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை மக்கள் ரசிக்க வில்லை” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை மக்கள் ரசிக்க வில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

நாகமலைபுதுக்கோட்டை,

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே துவரிமான் ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சத்தில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமான பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மதுரையில் குழந்தைகள் கடத்தலில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் பாரபட்சமின்றி தமிழக அரசு மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்திட தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும். தடுப்பூசி போடும் பணிகளில் தமிழக அரசு கவனம் செலுத்தாமல் மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவதை பொதுமக்கள் ரசிக்கவில்லை என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்