தமிழக செய்திகள்

சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்

வந்தவாசியில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி புறவழி சாலை பச்சையம்மன் கோவில் அருகே மின்கம்பம் சாய்ந்து கிடக்கின்றது. இந்த வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றனர்.

சாய்ந்து கிடக்கும் மின் கம்பம் மூலமாக மின்சாரம் சென்று கொண்டிருப்பதால் பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் போது உயிர் சேதம் ஏற்படும் அபாயத்தில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் போது பெரும் சிரமத்துடன் செல்கின்றன.

இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, அசம்பாவிதம் நடைபெறும் முன்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்