தமிழக செய்திகள்

சொந்த ஊர் செல்வதற்காக திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த மக்கள்

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

திருப்பூர்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெளியூர்களில் வசித்துவரும் மக்கள் பலர், வாக்களிப்பதற்காக நேற்று தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் காரணமாக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பேருந்து மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில், திருப்பூர் ரெயில் நிலையத்தில் இன்று காலையும் மக்கள் கூட்டம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். இன்று காலை, கோவை - சென்னை, கோவை - திருப்பதி இண்டர்சிட்டி ரெயில்கள், திருச்சி, மதுரை செல்லும் ரெயில்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து