ஆக்கிரமிப்பு
பேரணாம்பட்டு டவுன் தரைக்காடு பகுதியில் பொது மக்கள் நிதி பங்களிப்புடன் அரசு தொடக்கப்பள்ளி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அரசு பாதை புறம்போக்கு இடத்தில் உருது பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து போராடி வந்தனர்.
இந்த நிலை பாதை புறம்போக்கு பகுதியில் தனிநபர் ஒருவர் 3 சென்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, அந்த இடத்துக்கு அரசு பட்டா வழங்கியுள்ளதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருவை அடைத்து சுமார் 6 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டினார். இதனையறிந்த பொதுமக்கள் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என்றும், பள்ளி கட்டிடத்திற்கு இடம் வழங்க வேண்டும் எனவும் அதிதாரிகளிடம் புகார் அளித்தனர்.
முற்றுகை போராட்டம்
இதனையடுத்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த இடம் அரசுக்கு சொந்தமான பாதை புறம்போக்கு என்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தனி நபரை வருவாய் துறையினர் எச்சரித்தனர். இதன் பின்னர் கடந்த 18-ந் தேதி மீண்டும் அதே இடத்தில் தனி நபர் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுப்பட்டதால் தரைக்காடு பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் அந்த நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த பொதுமக்கள் பேரணாம்பட்டு டவுன் கிராமநிர்வாக அலுவலர் அன்பரசனிடம் முறையிட்டனர். அதற்கு அவர் முறையான பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிராமநிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கலெக்டர் உறுதி
தகவலறிந்த குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன் மற்றும் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தி அரசுக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்தி பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதற்கிடையில் வேறு ஒரு நிகழ்ச்சிக்காக வந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் பொதுமக்கள் முறையிட்டனர். இதற்கு அவர் வருகிற 28-ந் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.