தமிழக செய்திகள்

அம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

அம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தெற்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல் அதி உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீட்டர் தொலைவில் அதி உச்ச உயர் தீவிர புயல் மையம் கொண்டுள்ளது.

இந்தப்புயலானது, வரும் 20 ஆம் தேதி மாலை மேற்கு வங்க திகா கடற்கரை மற்றும் வங்கதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் ஆ.ர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கடல் கொந்தளிப்புடன் இருக்கும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் நிலமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்