தமிழக செய்திகள்

"சிறுபான்மை, பெரும்பான்மை என்பதைத் தாண்டி இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" - அண்ணாமலை பேச்சு

போலி அரசியலை உடைப்பதற்காக பா.ஜ.க. பாடுபட்டுக் கொண்டிருப்பதாக மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் இன்று பா.ஜ.க. சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்று வருகிறது. இதில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை முதல் முறையாக பா.ஜ.க. நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைத்து மதங்களைச் சேர்ந்த சான்றோர்கள், பெரியோர்களையும் ஒரே மேடையில் இணைத்துள்ளது.

பா.ஜ.க. கட்சியில் எல்லா மதத்தில் இருந்தும் தலைவர்கள் வருவார்கள். இது ஒரு மதத்திற்கு சொந்தமான கட்சி இல்லை. அது மக்களுக்கு புரிவதற்கு சற்று காலம் ஆகும். அதுவரை கட்சி கடுமையாக வேலை செய்ய வேண்டும்.

இந்தியாவில் ஒரு மாநிலத்தில் சிறுபான்மையாக இருப்பவர்கள், இன்னொரு மாநிலத்தில் பெரும்பான்மையாக இருப்பார்கள். எனவே சிறுபான்மை, பெரும்பான்மை என்பதைத் தாண்டி இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். போலி அரசியலை உடைக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. பாடுபட்டுக் கொண்டிருக்கிறது."

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்