தமிழக செய்திகள்

பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்: சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக கடந்த 12-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதேபோல, சொந்த ஊரில் இருந்து திரும்புவர்களுக்கு 18-ந்தேதி மற்றும் 19-ந் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், தொடர் விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர். மக்கள், காலையில் தங்களது பணியிடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இரவு முதலே சென்னைக்கு வந்துகொண்டிருப்பதால், சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை