தமிழக செய்திகள்

மக்கள் அச்சமின்றி கருப்பு பூஞ்சை நோய் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

தமிழ்நாட்டை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பரவல் அச்சத்திலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்புப் பூஞ்சை எனும் உயிர்க்கொல்லி நோய் வேகமாகப் பரவத் தொடங்கி இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, நோயை பதற்றமின்றி எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும்.கருப்புப் பூஞ்சை கொடிய நோய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொற்றக்கூடிய நோயோ, குணப்படுத்த முடியாத நோயோ அல்ல. கண்பார்வையை பறிப்பது மட்டுமின்றி, மூளைக்கும் வேகமாக

பரவி உயிரையும் பறிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

கருப்புப் பூஞ்சை நோய் குறித்த விவரங்களை அறிந்து விழிப்புடன் இருப்பதாலும், அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டர்களை அணுகுவதன் மூலமும் இந்த நோயை வெல்ல முடியும். எனவே, மக்கள் கருப்புப் பூஞ்சை நோய் குறித்த அச்சம் இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு