தமிழக செய்திகள்

குழாய்களில் கலங்கலாக வரும் குடிநீரால் மக்கள் அவதி

குடிநீர் குழாய்களில் தண்ணீர் கலங்கலாக காவி நிறத்தில் வருவதால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

தினத்தந்தி

தொண்டி

திருவாடானை யூனியன் பாகனூர் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு வரும் குடிநீர் குழாய்களில் தண்ணீர் கலங்கலாக காவி நிறத்தில் வருவதால் குடிநீரை சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர், குடிநீர் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அருண், விக்டோரியா, லெட்சுமி, வனிதா, முனியாண்டி ஆகியோர் கூறியதாவது, எங்கள் குடியிருப்பு பகுதிக்கு வரும் குடிநீர் காவி நிறத்தில் வருகிறது. இந்த தண்ணீரை குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்த முடியவில்லை. இந்த தண்ணீரை குடிப்பதால் இருமல், காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பலனில்லை. எனவே எங்கள் பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து