தமிழக செய்திகள்

சென்னை காசிமேடு மீன் சந்தையில் குவிந்த மக்கள்

விடுமுறையையொட்டி காசிமேடு மீன் சந்தையில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். அந்த வகையில், இன்று வார விடுமுறையையொட்டி காசிமேடு மீன் சந்தையில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை முதலே மீன்கள் வாங்குவதற்காக காசிமேட்டில் குவிந்த மக்கள், தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி வருகின்றனர். வஞ்சிரம், வவ்வால், பால் சுறா, திருக்கை, பாறை, ஷீலா, சங்கரா உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. மக்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.  

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்