தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகையையொட்டி திருத்தணி கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி, பட்டாசுகளை வாங்க திருத்தணி கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினத்தந்தி

பொதுமக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஜவுளி, பட்டாசு, நகை வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. விடுமுறை நாளான நேற்று திருத்தணி கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. திருத்தணி மார்க்கெட், அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஜவுளி, பட்டாசு மற்றும் நகைகள் வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அரக்கோணம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

போலீசார் பாதுகாப்பு

போக்குவரத்து நெரிசலை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலகட்டமாக இருந்து வந்த சூழ்நிலையில், தற்போது பொதுமக்கள் அதிகளவு பொருட்களை வாங்க கடைவீதிக்கு வருகின்றனர்.கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்தாண்டு தீபாவளியையையொட்டி, அதிக அளவு கடைகள் திருத்தணியில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஜவுளி மற்றும் பட்டாசு உள்பட அனைத்து பொருட்களின் விலைகள் கடந்த முறையை விட தற்போது அதிக அளவு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை