தமிழக செய்திகள்

சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்-பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

தினத்தந்தி

பரமக்குடி பகுதியில் ஒரு உணவு நிறுவனத்தின் சார்பில் சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் நிதி திரட்டினர். இந்நிலையில் பணம் பெற்றவர்களிடம் முதிர்வு தொகையை வழங்காமல் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த நாகலட்சுமி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நிதி நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டு இருந்தால் அவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம். ராமநாதபுரம் நேரு நகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் தங்கள் புகார்களை அளிக்க வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்