தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடந்தது

தினத்தந்தி

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் லட்சுமி முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் துரைராஜன் கலந்துகொண்டு பேசினார். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்த ரூ.500 உதவித்தொகையை சேர்த்து வழங்கப்படாமல் உள்ளது. இந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் சங்க முக்கிய நிர்வாகிகளை அழைத்து கலெக்டர் மகாபாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் நிர்வாகிகள் கோவிந்தசாமி, பாரதிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு