தமிழக செய்திகள்

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இதில் 221 மனுக்கள் பெறப்பட்டது.

குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, இலவச வீடுகள் வேண்டி, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் அளித்தனர். மொத்தம் 221 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மானியத்தொகை

தொடர்ந்து, தாட்கோ மூலம் பயனாளி ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் ஆட்டோ வாங்கியதற்கான மானியத் தொகைக்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் ஸ்ரீ வள்ளி, கலால் உதவி ஆணையர் வரதராஜ், தாட்கோ மாவட்ட மேலாளர் அமுதா ராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்