தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சியில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் :357 பேர் மனு கொடுத்தனர்

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 357 பேர் மனு கொடுத்தனர்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடன் உதவி, ஏரி, குளம் தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 330 பேர் மனு கொடுத்தனர்.

முன்னதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று 27 பேரிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ராஜலட்சுமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்