தமிழக செய்திகள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன், பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று அவர் பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மேலும் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும் போலீசாரிடம் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் தங்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து இலவச எண்ணில் (10581) புகார் தெரிவிக்கலாம் என்றார். கூட்டத்தில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் (சமூகநீதி மற்றும் மனித உரிமைகள்) ராணி மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்