தமிழக செய்திகள்

தமிழகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு - தமிழக அரசு

அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்தோறும் நடைபெறும் குறைதீர் முகாம்கள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்தோறும் நடைபெறும் குறைதீர் முகாம்கள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூற்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தற்போது, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன.

மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் உட்பட அனைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது