சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான நடிகர் கமல்ஹாசன், 3-ம் கட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:-
அடுத்த கட்ட பிரசாரம் விரைவில் தொடங்கப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த பிரசாரம் எங்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. மக்கள் மழையிலும், வெயிலிலும் நின்று வரவேற்றதும், நம்பிக்கை அளிக்கும் வகையில் வாழ்த்து சொன்னதும் சந்தோஷமாக இருந்தது. நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க கேட்டு உள்ளேன். ஆதரவுக்காக இல்லாமல் நட்புக்காக சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.