தமிழக செய்திகள்

மக்களுக்கு விஜய் மீதான நம்பகத்தன்மை குறையும்: துரை வைகோ

விஜய்க்கு பின்னால் இளைஞர் பட்டாளம் உள்ளது என்று துரை வைகோ கூறினார்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சகோதரர் விஜய்யை பொறுத்தவரை அவர் எதிர்க்கட்சியாக செயல்பட நினைக்கிறார். அவர் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது. படித்தவர், அவர் பின்னால் இளைஞர் பட்டாளம் உள்ளது. பொத்தாம் பொதுவாக அவர் அனைவர் மீதும் குற்றச்சாட்டு கூறுவது சரி அல்ல. முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து அவர் கூறுவது ஏற்புடையது அல்ல.

எந்தெந்த நிறுவனங்களில் எல்லாம் முதலீடு செய்யப் போகிறார்கள், எங்கு அந்த முதலீட்டை செய்யப்போகிறார்கள் என்ற தரவுகளுடன் தான் முதல்-அமைச்சர் பதில் கூறியுள்ளார். ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகள் வருவதற்கு உண்டான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அது எந்தெந்த தொழில் நிறுவனங்கள் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

இருந்தும் விஜய், முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சனம் செய்திருப்பது அவருடைய தகுதிக்கு நல்லதல்ல. இது மக்களிடம் அவர் மீதான நம்பகத்தன்மையை குறைக்கும். அதிமுக- பாஜகவை பொறுத்தவரை அவர்கள் திடீரென கூட்டணி சேருகிறார்கள். திடீரென அந்த கூட்டணியில் பலர் வெளியே செல்கிறார்கள். இதுகுறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை