தமிழக செய்திகள்

பேரறிவாளன் விடுதலை: கவர்னரை சந்தித்து தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக கவர்னரை சந்தித்து தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிவாளன் விடுதலை குறித்து 3 அல்லது 4 நாட்களில் தமிழக கவர்னர் முடிவு செய்வார் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தான் ஏற்கனவே அமைச்சரவையில் முடிவு செய்து கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி 2 ஆண்டு ஆகியுள்ள நிலையில், இந்த மிக மிக முக்கிய தருணத்தில் கவர்னரைச் சந்தித்து பேரறிவாளன் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைப் போல அனைத்து கட்சிகளும், சமூக அமைப்புகளும் பெரிய அழுத்தம் கொடுக்கும் வகையில் தங்கள் கருத்துகளை உடனடியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்