கோவை,
கோவையை அடுத்த வெள்ளலூரில் தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது. இந்த சிலையை கடந்த 8-ந் தேதி இரவு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிந்தும் தலை பகுதியில் குங்குமத்தை தூவிவிட்டும் அவமரியாதை செய்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் நள்ளிரவில் 2 பேர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தது தெரியவந்தது.
அதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் பெரியார் சிலைக்கு அவமதிப்பு செய்தது இந்து முன்னணியை சேர்ந்த அருண் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.