சென்னை,
மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் தமிழ்நாட்டின் நிலை. அந்த நிலையில் தான் தொடர்ந்து இருக்கிறோம். அதை வலியுறுத்துவோம். ரஜினிகாந்திடம் எந்த அமைச்சர்களும் பேசவில்லை. அப்படி துரோகம் செய்யும் கும்பல் இங்கு கிடையாது. அ.தி.மு.க. கூட்டம் விசுவாசமிக்கது.
பெரியார் சிலையை அவமதிப்பதை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது. வன்முறைக்கு, வன்முறை தீர்வு கிடையாது. இது ஜனநாயக நாடு. எல்லோரும் சுதந்திரமாக வழிபடுவதற்கும், எல்லா தலைவர்களும் போற்றப்படுவதற்கும் தமிழ்நாட்டில் இடம் உண்டு. எந்த ஒரு தலைவர் சிலையையும் அவமதிப்பது என்பது கடும் குற்றம். அதன் அடிப்படையில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதில் பிரச்சினை இருந்தது. மாநகராட்சி கமிஷனர், மீன்வளத்துறை இயக் குனர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் அங்கு சென்று மீன் விற்பனை செய்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இதில் நல்ல முடிவு வரும். இது மீனவர்களுக்கான அரசு. மீனவர்கள் விரும்பும் வகையிலான நடவடிக்கையை தான் அரசு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.