தமிழக செய்திகள்

மருத்துவ விடுப்பில் சென்ற பெரியார் பல்கலை. பதிவாளர்

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.

தினத்தந்தி

சேலம்,

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தணிக்கை குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கணிப்பொறி, உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்தது நிரூபணமானது.

இந்நிலையில் பதிவாளர் தங்கவேல் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு உயர்கல்வித்துறை பரிந்துரை செய்திருந்தது. உயர்கல்வித்துறை பரிந்துரைத்த நிலையிலும் பதிவாளர் தங்கவேல் சஸ்பெண்ட் செய்யப்படாமல் இருந்தார்.

இந்த நிலையில் பதிவாளர் தங்கவேல் தற்போது மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இம்மாத இறுதியில் தங்கவேல் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் 12 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு