தமிழக செய்திகள்

பெண் உரிமை, பெண் விடுதலை உள்ளிட்டவையும் பெரியாரின் கொள்கைதான்: பா.வளர்மதி

பெண் உரிமை, பெண் விடுதலை உள்ளிட்டவையும் பெரியாரின் கொள்கைதான் என்று பா.வளர்மதி தெரிவித்துள்ளார். #tamilnews

தினத்தந்தி

சென்னை,

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு இந்தாண்டிற்கான தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டது. அதனை முதலமைச்சர் பழனிசாமியிடம் இருந்து வளர்மதி இன்று பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பேசிய பா.வளர்மதி, ''பெரியார் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் 9 வயது சிறுமியாக மேடைப் பேச்சைத் தொடங்கியவள் நான். இன்று அவர் பெயரால் விருதை பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன்.

தினந்தோறும் கோயில் செல்லும் வளர்மதிக்கு பெரியார் விருதா என சமூக வலைதளங்களில் என்னைக் கேலி செய்பவர்கள் யார் என எனக்குத் தெரியும்கடவுள் ஒழிப்பு கொள்கை மட்டும்தான் பெரியாரின் கொள்கையா? பெண் உரிமை, பெண் விடுதலை உள்ளிட்டவையும் பெரியாரின் கொள்கை தான். பெண் உரிமை கொள்கையை மையப்படுத்தியே ஒரு பெண்ணுக்கு பெரியார் விருது கொடுத்துள்ளார் முதல்வர்'' என்றார். #tamilnews

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்