கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் குளிக்க 10 நாட்களாக வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

தினத்தந்தி

நெல்லை,

தென்மேற்குப் பருவமழை கடந்த வாரம் தொடங்கியதை அடுத்து, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிமுத்தாறு அருவியில் தற்போது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் குளிக்க 10-வது நாளாக வனத்துறையினர் தடைவிதித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மழை பொழிவு குறைந்துள்ளதை அடுத்து மணிமுத்தாறு அருவியில் 10 நாட்களுக்கு பின்னர் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து மணிமுத்தாறு அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்