சென்னை,
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பார்களில் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் பார்கள் திறக்கப்பட வேண்டும்.
பார்களுக்கு வருவோருக்கு வெப்ப பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். பார்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர்களை வைக்க வேண்டும். கொரோனா அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே பார்களில் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.