தமிழக செய்திகள்

குதிரை வாகனத்தில் பெருமாள் வீதிஉலா

குதிரை வாகனத்தில் பெருமாள் வீதிஉலா நடைபெற்றது.

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீமரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபால சுவாமி கோவிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் ஆண்டாள் உற்சவ சிலை கோவிலில் இருந்து ஊர்வலமாக தெப்பக்குளம் கரையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கணு குளித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அக்ரகாரம் வழியாக ஆண்டாள் சிலை கோவிலுக்கு மீண்டும் பிரகாரமாக எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து நேற்று இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பூஜைகளை பட்டாபிராமன் பட்டாச்சாரியார் செய்து வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு