வள்ளியூர்:
வள்ளியூர் அருகே ராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையார் சாஸ்தா கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு கோவில் விமான கோபுர பாலாலயம் நடந்தது. முதல் நாளில் விக்னேசுவர பூஜ, புண்ணியாகவாசனம், முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
நேற்று காலையில் விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் விமான கோபுரம் பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர், நிர்வாக அலுவலர், பணியாளர்கள் செய்துள்ளனர்.