தமிழக செய்திகள்

ஊராட்சி தலைவர் கிராம மக்களுடன் மனு

ஊராட்சி தலைவர் கிராம மக்களுடன் மனு கொடுத்தார்.

தினத்தந்தி

முதுகுளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கருமல் ஊராட்சி. இந்த ஊர் ஊராட்சி தலைவர் லிபியாள் தலைமையில் கிராம மக்கள் ஏராளமானோர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கருமல் ஊராட்சி பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. பஸ்நிறுத்தம் முதல் குடிநீர் வாரிய அலுவலகம் வரையிலும், மின்மாற்றி அமைந்துள்ள இடம் முதல் கருப்பன் கோவில் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. நடந்துகூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், பஸ்நிலையம் செல்லவும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். வயதானவர்கள் இந்த சாலைவழியாக செல்ல முடியவில்லை. மழைக்காலம் வர உள்ளதால் இந்த சாலையில் எவ்வாறு விழாமல் செல்ல முடியும் என்ற கவலை எழுந்து உள்ளது. உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் பயன் உள்ளதாக இருந்து வந்த நிலையில் தற்போது செயல்படாமல் உள்ளது. இதனால் குடிநீருக்கு அலைந்துதிரிந்து வருகிறோம்.

மின்கம்பங்கள் அனைத்தும் அரித்து எப்போது விழும் என்ற அபாய நிலையில் உள்ளது. இதுபோன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் இன்றி கருமல் ஊராட்சி உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் பகுதியின் அவசியம் கருதி மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. 

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?