தமிழக செய்திகள்

கூடுதல் கலெக்டரிடம் மனு

வேதாரண்யத்தில் நடந்து வரும் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூடுதல் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

நாகை மாவட்ட வணிகர் சங்க செயலாளர் திருமலை. செந்தில் மற்றும் நாகை மாவட்ட வணிகர் சங்க பொருளாளர் கந்தசாமி, வேதாரண்யம் நகர வணிகர் சங்க செயலாளர் முரளி ஆகியோர் நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங்கை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், வேதாரண்யம் நகர கடைத்தெருவில் 4 வீதிகளிலும் ரூ.10 கோடியில் வடிகால் பணிகள் கடந்த 1 ஆண்டாக நடந்து வருகிறது. இந்த பணிகள் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளன. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் வடிகால் பணிகளை வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விரைவில் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட அவர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்