தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு...!

சென்னையில் பெட்ரோல் விலை 107-யை தாண்டியுள்ளது, டீசல் விலை 97-யை தாண்டியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில் கடந்த 22 ஆம் தேதியில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.107.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.97.52-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05, டீசல் விலை ரூ.6.09 உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்