தமிழக செய்திகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ரூ.105.74-க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.105.43 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.101.59 ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.105.74-க்கும் மற்றும் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.101.92-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...