தமிழக செய்திகள்

சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.74.23 ஆகவும், டீசல், விலை ஒரு லிட்டர் ரூ.67.57 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.74.23 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.67.57 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.