செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அடுத்த, தெள்ளிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். தே.மு.தி.க., நிர்வாகியான இவர் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குடும்பத்தினருடன் வீட்டில் இரவு உறங்கி கொண்டிருந்தார். மர்ம கும்பல் ஒன்று அதிகாலை 2 மணிக்கு, ராஜசேகர் குடிசை வீட்டின் மீது, பெட்ரோல் குண்டு வீசியது. வீடு தீப்பிடித்து எரியும் சத்தம் கேட்டு எழுந்து, வீட்டிலிருந்தோர் வெளியே ஓடி வந்தனர்.
அக்கம் பக்கத்தினரும் எழுந்து வந்து, அவர்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர். வீட்டின் ஒரு பகுதி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இதுபற்றி வழக்கு பதிவு செய்து பாலுர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.