தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; மக்களின் தலையில் பாரத்தைப் போடுகிறது மத்திய அரசு - மு.க.ஸ்டாலின்

சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது மத்திய பா.ஜ.க. அரசு! ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது.

இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது. இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது மத்திய அரசு?”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.