தமிழக செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ரூ.106.66க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டர் ஒன்றுக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.106.35க்கும் மற்றும் டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து ரூ.102.59க்கும் விற்பனை செய்யப்பட்டன.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.106.66க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை மாற்றமின்றி ரூ.102.59க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்