தமிழக செய்திகள்

நாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் - பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு

நாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் என்று பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

'தமிழக அரசு நிவர் புயலை எதிர் கொள்ள, நாளை (25.11.20) பொது விடுமுறை அறிவித்துள்ளது. பெட்ரோல் டீசல் விற்பனை அத்தியாவசிய சேவையினை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல்டீசல் விற்பனை நிலையங்களும் பாதுகாப்புடன் வழக்கம் போல் இயங்கும்.

நாளை புயலினை எதிர்கொள்ளும் மாவட்டங்களான கடலூர் ,விழுப்புரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது பெட்ரோல் டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். புயல் கரையை கடந்த பிறகு தக்க பாதுகாப்புடன் மீண்டும் விற்பனை தொடங்கப்படும். மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல விற்பனை நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை