இதுதொடர்பான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு நடக்க உள்ளது.
இதில் கலந்து கொள்ள இருப்பவர்களின் தற்காலிக பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.
மேற்கண்ட தகவல் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.