சிவகங்கை
கல்லல் ஊராட்சி ஒன்றியம் நாச்சியார்புரம் கிராமத்தில் செய்திமக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த புகைப்பட கண்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்படங்கள், அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் தலைமையில் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம்பெற்றன. மேலும் கண்காட்சியில் அரசு திட்டங்கள், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகுவது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.