தமிழக செய்திகள்

மோகனூர் அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலை சேதம்

மோகனூர் அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலை சேதம்

தினத்தந்தி

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் காவிரி ஆற்றில் இருந்து மோகனூர், வளையப்பட்டி வழியாக பட்டணம், சீராப்பள்ளி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் மோகனூரில் இருந்து வளையப்பட்டி செல்லும் சாலையில் நேற்று காலை தனியார் பள்ளி அருகே நடுபகுதியில் திடீரென குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் சென்றது. இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மோட்டார் நிறுத்தப்பட்டது. எனினும் அந்த இடத்தில் சுமார் 5 அடி ஆழத்தில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கூட்டு குடிநீர் திட்ட பணியாளர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சேதமடைந்த சாலையில் தடுப்பு வைத்து போக்குவரத்தை சீர்படுத்தினர். தொடர்ந்து உடைந்த குழாயை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து