சாயல்குடி
கடலாடி அருகே ஏ.புனவாசல் ஊராட்சியில் கிழக்கு குடியிருப்பு மற்றும் வடக்கு குடியிருப்பு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படவில்லை என கடலாடி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், ஆகியோர் மூலம் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அமைச்சர் ராஜகண்ணப்பன் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அக்கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்து உடனடியாக அப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க உத்தரவிட்டார்.
ஏ.புனவாசல் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்களால் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகள் சரி செய்யப்பட்டு கிராம மக்களுக்கு குடிநீர் உடனடியாக வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.