தமிழக செய்திகள்

கோவில் சுவர்களில் போஸ்டர்கள் ஓட்டுவதை தடுக்க வேண்டும்

கோவில் சுவர்களில் போஸ்டர்கள் ஓட்டுவதை தடுக்க வேண்டும்

தினத்தந்தி

கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில் சுவர்களில் போஸ்டர்கள் ஓட்டுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில் நகரம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மாநகரில் சிறப்பு மிக்க பல கோவில்கள் உள்ளன. இதன் காரணமாக கும்பகோணம் கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. கும்பகோணத்திற்கு வெளி மாநிலம், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.

சுவர்களில் போஸ்டர்கள்

கும்பகோணத்தில் புகழ்மிக்க திருநாகேஸ்வரம் கோவில், சோமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில் சுற்றுச்சுவர்களில் பல வண்ண கலரில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப்பகுதி செல்லும் வாகன ஓட்டிகள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதை பார்க்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கண்காணிப்பு கேமரா

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கும்பகோணத்தில் கோவில் சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் வெளிப்புறங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்