தமிழக செய்திகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம் - அமைச்சர் சேகர் பாபு தகவல்

பேருந்து நிலையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

நடப்பாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தேவையான முகப்பு, பூங்காக்கள், காவல் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் கடந்த ஆட்சியில் சரிவர செய்யப்படாததால், அந்த பணிகளை ஏற்றுக்கொண்டு சுமார் 8 கி.மீ. அளவிற்கு புதிதாக தார் சாலை அமைக்கும் பணி, சுமார் ரூ.13 கோடி செலவில் கால்வாய் அமைக்கும் பணி ஆகியவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினந்தோறும் அந்த இடத்திற்கு அதிகாரிகள் சென்று பணிகளை துரிதப்படுத்து வருகிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்."

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்