தமிழக செய்திகள்

செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் செயற்கை கோள் அனுப்ப திட்டம் - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்

செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் செயற்கை கோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில், உலக புகழ்மிக்க சனீஸ்வரர் பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், சனிக்கிழமையான இன்று இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் தலைவர் சிவன், தனது குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக சனீஸ்வரபகவான் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

அதை தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் செயற்கை கோள்கைளை அனுப்பதிட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் வீனஸ் உள்ளிட்ட வேறு கிரங்களுக்கும் செயற்கை கோள்களை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சந்திராயன் செயற்கைகோளை மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும், நல்லப்படியாக முடிய தற்போதைய அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்