தமிழக செய்திகள்

தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்; திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

மாற்று விமானம் மூலம் பயணிகள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சியில் இருந்து இன்று சார்ஜாவிற்கு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் விமானத்திற்குள் அமர்ந்திருந்த நிலையிலேயே, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பழுதுநீக்கும் பணி நடைபெற்றது.

இருப்பினும் பணிகள் முடிவடையாததால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று பகல் 12 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?